Breaking News

உளுந்தூர்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மை சமேத ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மை சமேத ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயிலில் கடந்த 6-ம் தேதி அன்று விக்னேஸ்வர பூஜை உடன் மகா கும்பாபிஷேக விழா தொடங்கிய நிலையில் தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று கடம் புறப்பாடு நடைபெற்றது.

இதனை தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனித நீர் மேளம்  தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு விமான கோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழாவெகு விமர்சையாக நடைபெற்றது இதனைத் தொடர்ந்து ஸ்ரீ கைலாசநாதருக்கு  அபிஷேக ஆராதனையும் தீபாதனையும் நடைபெற்றது.


இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்  செய்தனர் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கைலாசநாதர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் மற்றும் சாரதா ஆசிரமம் நிர்வாகி யத்தீஸ்வரி ஆத்ம விகாசப்ரியா அம்பா, ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.


இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு,துணைத் தலைவர் வைத்தியநாதன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர் மற்றும் அறங்காவல் குழு தலைவர் பிரகாஷ், குழு உறுப்பினர்கள்  ரமேஷ்பாபு, வெங்கடேசன் மற்றும்  நகர மன்ற உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் இதில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படா வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

No comments

Copying is disabled on this page!