இன்ஸ்டாகிராம் காதல்; காதலன் கைவிட்டதால் காதலி கொடுத்த புகாரில் காதலன் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஆவலப்பள்ளி இந்திரா நகரை சேர்ந்தவர் ரம்யா என்கிற புவனேஸ்வரி (வயது 23). இவருக்கும் ரவி என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று நான்கு வயதில் வினித் என்ற மகன் உள்ளார். இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2022 ஆம் ஆண்டு கணவனை பிரிந்து ஓசூர் பாரதி நகரில் தங்கி தனியார் வாட்ச் கம்பெனியில் வேலை செய்து வந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கௌதம் (வயது 24) என்பவர் ஓசூரில் உள்ள துணிக்கடையில் பணி புரிந்து வருகிறார்.
இந்த நிலையில் ரம்யா என்கிற புவனேஸ்வரி கடந்த ஒரு வருடமாக கடையில் பணிபுரியும் கௌதமுடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு காதலித்து ஒன்றாக பழகி வந்துள்ளனர். கௌதம் தன்னை திருமணம் செய்து கொண்டு தனியாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் தற்போது கௌதம் தன்னுடன் வாழ மறுப்பதாக கூறி ரம்யா என்கிற புவனேஸ்வரி (வயது23) ஊத்தங்கரை அழைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஊத்தங்கரை அனைத்து மகளிர் நிலைய போலீசார் கௌதம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கௌதமை கைது செய்தனர்.
No comments