மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தூய்மை பணிகளை நேரில் ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பெசன்ட் நகர் நேரு தெருவில் குடியிருப்பு வீடுகளில் இருந்து மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தூய்மை பணியாளர்களுக்கு பிரித்து வழங்கும் பணிகளை இன்று காலையில் சமூக நலத்துறை ஆணையரும் மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அமுதவல்லி மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் நகராட்சி பகுதிக்குட்பட்ட அரசு நகர்புற ஆரம்ப சுகாதார வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் தினசரி வருகை பதிவு செய்யும் பணிகளையும் ஆய்வு செய்தனர் அதேபோன்று நகராட்சிக்கு உட்பட்ட மட்டக்குளம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர் அப்பொழுது மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் சங்கர் மற்றும் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர் பல்வேறு பணிகள் குறித்தும் தூய்மை பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
No comments