மத்தூர் அருகே தேனீக்கள் கொட்டியதில் 10 பேர் காயம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் ராஜவீதியில் உள்ள புளிய மரத்தில் இருந்த தேனீக்கள் அவ்வளியே சென்ற பொது மக்களை கொட்டியதில் காயம் ஏற்பட்டு மத்தூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. மிலாடி நபியை முன்னிட்டு பொது விடுமுறை என்பதால் பள்ளி மாணவர்கள் இன்று ராஜவீதியில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தன அப்போது எதிர்பாராத விதமாக கிரிக்கெட் பந்து புளிய மரத்தில் இருந்த தேன்கூட்டின் மீது மோதியது.
இதில் கலைந்து சென்ற தேனீக்கள் அவ்வழியே சென்ற பொது மக்களை கொட்டியது சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவ்வலியே சென்ற பொது மக்களை கொட்டியதில் பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் தேனீக்கள் கலைந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளின் கதவுகளையும் ஜன்னல்களையும் பூட்டிக்கொண்டு உள்ளையே முடங்கி இருந்தன.
No comments