காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கோவில் சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்யும் கும்பலை கைது செய்ய வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் அண்மை காலமாக கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை மர்ம நபர்கள் போலி ஆவணங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவில்பத்து ஸ்ரீ பார்வதீஸ்வரர் கோவில் சொத்துக்களை போலி ஆவணங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றி விற்பனை செய்து வரும் கும்பலை கைது செய்ய வலியுறுத்தியும் தக்களூர் ஸ்ரீ சிவலோகநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான 50 கோடி மதிப்பிலான சொத்துக்களை அபகரித்த கும்பல் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி சார்பில் புதிய பேருந்து அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மாநில தலைவர் சனில்குமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டத் தலைவர் கணேஷ் குமார், நகரத் தலைவர் ராஜ்குமார் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை அபகரிக்க நினைக்கும் கும்பலை புதுச்சேரி அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் கைது செய்ய வலியுறுத்தி கண்டன கோசங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments