திண்டிவனத்தில் அனுமதியை மீறி விநாயகர் சிலை வைத்த இந்து முன்னணி, சிலையை அப்புறபடுத்த முயன்ற போலீசார் தவறாக பேசியதாக கூறி பாஜக மாநில நிர்வாகி சாலையில் படுத்து தர்ணா.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காமாட்சி அம்மன் கோவில் அருகே விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் சிலை இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டது. இதற்கான அனுமதியை போலீசார் வழங்க வில்லை இது குறித்து போலீஸ் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்திய போது போலீஸ் ஒருவர் தவறாக பேசியதாக பாஜக மாநில இளைஞரணி செயலாளர் தினேஷ்குமார் இந்து முன்னணி நிர்வாகிகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டார். பின்னர் ரோட்டில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் இருந்த போதிலும் அவர் போலீசாரிடம் பேசாமல் தொடர்ந்து தனது சட்டையை தானே காழட்டிவிட்டு யாரோ பிடித்து இழுத்தது போல் நான் ஒரு மாநில செயலாளர் என்னையே இழுக்குறீங்க என்று வம்பு செய்து போராட்டத்தை கைவிடவில்லை., சாலையிலிருந்து ஓரமாக அப்புறப்படுத்த முயன்றனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் தள்ளு முள்ளும் பதட்ட நிலையும் உருவானது. போலீசாரிடம் தினேஷ் குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மீண்டும் விநாயகர் சிலை அருகே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். நான் கொலை குற்றவாளி அல்ல,கஞ்சா விற்பவன் அல்ல. நான் ஒரு மாநில நிர்வாகி என்னை ஏன் தரவென இழுத்தீர்கள் என கேட்டு போலீசாரிடம் மீண்டும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்தப் போராட்டத்தினால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் பதட்டமும் நிலவியது. சம்பவ இடத்திற்கு போலீஸ் துணை சூப்பி ரெண்டு சுரேஷ் பாண்டியன் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து மழை பேயத் தொடங்கியதால் நிர்வாகிகள் கலைந்து சென்றனர்.
No comments