உளுந்தூர்பேட்டை அருகே அஜிஸ் நகர் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் சென்னை திருச்சி நான்கு வழி சாலையில் போக்குவரத்து பாதிப்பு 4 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அஜீஸ்நகர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருவதால் சென்னை திருச்சி நான்கு வழி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் பொதுமக்கள் தென் மாவட்டங்களுக்கு செல்வதால் வழக்கத்தை விட அதிகளவு வாகனங்கள் தென் மாவட்டங்களை நோக்கி படையெடுத்து வருவதால் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்ல வேண்டிய நிலையே இருந்து வருவதால் வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
No comments