Breaking News

புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகள் இனி சனிக்கிழமைகளில் அரைநாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும் என கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.


புதுச்சேரியில் கோடை வெயில் காரணமாகவும் மக்களவைத் தேர்தல் காரணமாகவும் கோடை விடுமுறை 12 நாட்கள் நீடிக்கப்பட்டன. இந்த விடுமுறையை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் முழு நாளும் பள்ளிகள் இயங்கும் என கல்வி துறை அறிவித்து பள்ளி இழப்பீட்டு வருகை நாட்களுக்கான அட்டவணையை வெளியிட்டது.

5 சனிக்கிழமைகள் முழு நாளாக பள்ளிகள் இயங்கிய நிலையில் அடுத்து வரும் 7 சனிக்கிழமைகளில் அரை நாள் மட்டும் வகுப்புகளை நடத்தப்படும் என கல்வி துறை திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments

Copying is disabled on this page!