Breaking News

புதுச்சேரியில் புகையிலை கட்டுப்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.


புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகையிலை கட்டுப்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் துணை ஆட்சியா் சோமசேகா், மாநிலப் புகையிலைக் கட்டுப்பாடு அதிகாரி வெங்கடேஷ் மற்றும் சுகாதாரத் துறைச் சாா்ந்த பிரிவுகளின் அதிகாரிகள் பங்கேற்றனா். புகையிலைக்கு எதிரான பிரசாரத்தை செப்.23-ஆம் தேதி தொடங்கவும், அதை வரும் நவம்பா் வரையில் செயல்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டது.பிரசாரத்தில் முக்கியமாக விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், பேரணிகள், சுவா் விளம்பரங்கள் மற்றும் குறும்படங்கள் வெளியிடுதல் ஆகியவை இடம்பெறும் வகையில் நிகழ்ச்சிகள் அமைப்பது எனவும் கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.

No comments

Copying is disabled on this page!