Breaking News

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பரதராமி பேருந்து நிலையம் சமூகவிரோதிகளின் பிடியில்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பரதராமி பேருந்து நிலையம் பல வருடங்களுக்கு முன்பாக கட்டிய பேருந்து நிலையம் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது இந்த நிழல் கூடத்தில் மது அருந்துவது கஞ்சா குடிப்பது என பல்வேறு குற்ற சம்பவங்கள் அரங்கேறுவதாகவும் கூறப்படுகிறது கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதானவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

இது குறித்து ஒரு சில இளைஞர்கள் சென்று கேள்வி கேட்டால் அந்த நிழல் கூடத்தை ஆக்கிரமித்துள்ள சமூக விரோதிகள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும் ஆபாசமான வார்த்தைகளால் பேசுவதாகவும் கூறப்படுகிறது எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது


- குடியாத்தம் தாலுக் செய்தியாளர்  அ. தென் காந்தி 


No comments

Copying is disabled on this page!