பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பழவேற்காடு கடலில் பலத்த பாதுகாப்புடன் கரைக்கப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் கடந்த 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் வித விதமான விடிவங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டு வந்தன. பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் வாகனங்களில் பழவேற்காடு பகுதிக்கு கொண்டு வரப்பட்டன.
பேண்டு வாத்தியங்கள் முழங்க ஆட்டம், பாட்டத்துடன் கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைக்கு கடற்கரையில் வைத்து தீபமேற்றி வழிபாடு செய்த பின்னர் கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன. 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பழவேற்காடு கடலில் கரைக்கப்பட்டு வரும் நிலையில் தீயணைப்பு வீரர்களும், காவல்துறையினரும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பேரிடர் மீட்பு கால தன்னார்வலர்கள் உதவியுடன் பழவேற்காடு கடலில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வருகின்றன.
No comments