Breaking News

மாணவர்கள், இளைஞர்கள் தன்னம்பிக்கையுடனும் முயற்சியுடனும் செயல்பட்டால் எளிதில் இலக்கை அடைய முடியும் என மன்னார்குடி அருகே நடைபெற்ற குரூப் 2 முதல் நிலை தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வழங்கும் விழாவில் கல்வியாளர்கள் பேச்சு


திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள தென்பரை எனும் குக்கிராமத்தில் சிறந்த கல்வியாளர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியார்கள் மற்றும் தன்னார்வலர்களை  கொண்டு  தென்பரை கிராமம் மட்டுமன்றி சுற்று வட்டார பகுதி மாணவ மாணவியர்களையும் இணைத்துக்கொண்டு  அரசு போட்டி தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகளை அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் நடத்தி வருகிறது. 

இத்தகைய பயிற்சி வகுப்பானது பள்ளி விடுமுறை நாட்களிலும்,  கோடை விடுமுறை காலத்தில் தொடர்ச்சியாகவும்  வகுப்புகள் நடத்தப்பட்டு  போட்டித் தேர்வெழுதும் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பை பெறுவதற்கான இலவச பயிற்சியை வழங்கி வருகிறது. இம்மையத்தில் படித்தவர்கள்  2023  முதல்  2024 வரை  சுமார்  50 க்கும் மேற்பட்டோர் அரசு பணியாளர்களாக நியமனம் பெற்றுள்ளனர். 


வரும் செப்டம்பர் 14ம் தேதி நடைபெறும் குரூப் 2 முதல் நிலை தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வழங்கும் நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் , அரசு அதிகாரிகள்  மற்றும் தனியார்   சேவை அமைப்பினர் கலந்துகொண்டு.  தேர்வு எழுதக்கூடிய 100 போட்டித் தேர்வர்களுக்கு  தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை வலங்கைமான் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி  முதல்வரின்   நேர்முக உதவியாளர் இராம.வேல்முருகன்   வழங்கினார். 


அப்போது கல்வியாளர்கள் பேசுகையில் தன்னம்பிக்கையுடனும் முயற்சியுடனும்  செயல்பட்டால்  எளிதில் இலக்கை அடைய முடியும். கடினமான பகுதிகளை எவ்வாறு நினைவில் வைத்துக் கொள்ளலாம், இளைஞர்கள் நினைத்தால் சாதனையாளர்களாக மாறலாம்  மக்களுக்காக தான் அரசாங்கம் உள்ளது  அரசாங்கம்  மக்களுக்கு எப்படி உதவி செய்வார்கள் என்றால்  அரசு துறையின் முலமாக  தான் மக்களுக்கு உதவி செய்ய முடியும்  என  தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் மன்னார்குடி ரோட்டரி ரோட்டரி சங்க தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. ரோட்டரி சங்க செயலாளர் கருணாகரன், ஆலங்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் க.மனோகரன், மாவட்ட சதுரங்க கழக முன்னாள் தலைவர் சாந்தகுமார், ஓய்வு தலைமையாசிரியர் குருசாமி 


மற்றும் நீதித்துறை எம்.ஆர். ரம்யா, முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நாராயணசாமி, பயிற்சியாளர் மீனாட்சி சுந்தரம், சமுதாய குழும செயலாளர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக பயிற்சி மைய நிறுவுநர் சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார். இயக்குநர் வைரமுத்து நன்றி கூறினார். ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

No comments

Copying is disabled on this page!