Breaking News

ஆம்பூரில் திடீரென இடிந்து விழுந்த மேம்பாலம் 6 பேர் படுகாயம்.


திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் 130 கோடி மதிப்பில் 700 மீட்டர் தொலைவிற்கு மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2023 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, தற்போது வரை 60 சதவிகித பணிகள் நிறைவடைந்த நிலையில், இந்த மேம்பால பணியில் வடமாநிலத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் தினமும் பணியாற்றி வரும் நிலையில், திடீரென மேம்பாலத்தின் ஒருபக்கம் கட்டப்பட்ட இரும்பு சாரம் 20 மீட்டர் தொலைவிற்கு இடிந்து விழுந்துள்ளது.

இதில் மேம்பால பணியில் ஈடுப்பட்டிருந்த பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 6  இளைஞர்கள் படுகாயம் அடைந்த நிலையில் அவர்களை மீட்ட அப்பகுதி மக்கள் அவர்களை சிகிச்சையிற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அதனை தொடர்ந்து மேம்பால பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் மற்றும் ஆம்பூர் நகர காவல்துறையினர்  மற்றும் போக்குவரத்தை சீர்செய்து, இவ்விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

அதனை தொடர்ந்து, சம்பவ இடத்தில் ஆம்பூர் வட்டாச்சியர் ரேவதி மற்றும் வருவாய்துறையினர் ஆய்வு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர், மேலும் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் இடிந்து விழுந்து 6 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் ஆம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- பு.லோகேஷ் திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் 

No comments

Copying is disabled on this page!