திருநள்ளாறு சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.சிவா சமூக ஆர்வலர்கள் மீது பொய் வழக்கு போட முயற்சிப்பதாக திருநள்ளாறு வட்டார காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் பரபரப்பு பேட்டி.
மேலும் தக்களூர் பகுதியில் உள்ள வழிகரை அம்மன் ஆலயத்தை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென அப்பகுதி மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தியதன் விளைவாக அக்கோயிலை நிர்வகித்து வரும் செல்வசண்முகம் அக்கோயிலில் வரும் உண்டியல் பணத்தை தனது சொந்த செலவுகளுக்கு பயன்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்நிலையில் இது போன்ற தவறுகளை தட்டிக் கேட்கும் என்னை போன்ற நபர்கள் மீது பொய் வழக்குகளை போட சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.சிவா முயற்சிப்பதாகவும், இதனிடையே 2008 ஆம் ஆண்டில் உரிய ஆவணங்களுடன் தனி தனிநபர் இடத்தை நான் வாங்கி இருந்தேன் அந்த இடத்தை நான் போலி ஆவணங்கள் தயாரித்து நான் வாங்கியதாக தவறான குற்றச்சாட்டை என் மீது வைத்து பொய் வழக்கு போட காவல்துறைக்கு சட்டமன்ற உறுப்பினர் சிவா வற்புறுத்தி வருவதாக தெரிய வருகிறது என்றார்.
இதுகுறித்து காவல்துறை என்னிடம் தீர விசாரித்து ஆவணங்களை சரிபார்த்து தவறு இருக்கும் பட்சத்தில் வழக்குப் பதிந்து கொள்ள எந்த ஆட்சேபமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். மேலும் எனது அரசியல் வளர்ச்சி பிடிக்காமல் என்னை முடக்க சட்டமன்ற உறுப்பினர் சிவா முயற்சிப்பதை வன்மையாக கண்டிப்பதாகவும் நான் தவறு செய்யவில்லை என்பதை மக்கள் மன்றத்தில் தெரிவிக்கவே இந்த செய்தியாளர் சந்திப்பை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments