Breaking News

இரண்டு குடியுரிமையுடன் விண்ணப்பித்த எட்டு மாணவர்களை தரவரிசை பட்டியலில் இருந்து சென்டாக் நீக்கியுள்ளது.



சென்டாக் எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வில் பிறமாநில மாணவர்கள் இரட்டை குடியுரிமையுடன் புதுச்சேரி மாணவர்களின் மருத்துவ இடங்களை அபகரிக்க ஒவ்வொரு ஆண்டும் முயற்சி வருகின்றனர். இதற்காக போலி சான்றிதழ்களையும் சமர்பிக்கின்றனர். இந்தாண்டும், இரட்டை குடியுரிமை பிரச்னை வெடித்தது. அதை தொடர்ந்து சுகாதார துறை சென்டாக் மாணவர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்து வந்தது.

இதில் 8 மாணவர்கள் போலி சான்றிதழ்களுடன் அதாவது இரட்டை குடியுரிமையுடன் புதுச்சேரியிலும் விண்ணப்பித்துள்ளது அம்பலமானது. இம்மாணவர்களை தரவரிசை பட்டியலில் இருந்து நீக்க சுகாதாரத் துறை, சென்டாக்கிற்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது. இந்த பரிந்துரையை ஏற்ற சென்டாக் தற்போது தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்த 4 மாணவர்கள், கேரளாவில் இருந்து விண்ணப்பித்த 4 மாணவர்கள் என எட்டு பேரையும் தரவரிசை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.

No comments

Copying is disabled on this page!