Breaking News

சனி ஞாயிறு விடுமுறை கிடையாது வேளாண்துறை அறிவிப்பால், விடுமுறை கிடைக்காமல் மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட வேளாண் துறை அலுவலர், வேளாண்துறை அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை.


மயிலாடுதுறை ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் இடுபொருள் விற்பனை கண்காணிப்பாளராக தஞ்சை மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த மணி குமார் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மயிலாடுதுறைக்கு பணியில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், இவருக்கு பணிச்சுமை அதிகமாக இருந்ததாக தெரிய வருகிறது. சமீபத்தில் வேளாண்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சனி, ஞாயிறு விடுமுறை இல்லாமல் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார் இதன் காரணமாக ஊருக்கு செல்லாமல் விடுமுறை இல்லாமல் தொடர்ந்து பணியாற்றி வந்த மணிக்குமாருக்கு இருதய நோய் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் இருந்து வந்துள்ளன. 

இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு அலுவலகம் வந்த மணிக்குமார் இரவு நேரத்தில் யாரும் இல்லாத போது அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை அலுவலகத்தை திறக்க வந்த முன் பரிசோதனை ஆய்வாளர் செந்தில்நாதன் என்பவர் மணிக்குமார் தூக்கில் தொங்கியபடி இருப்பதை பார்த்து காவல்துறை மற்றும் வேளாண்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவம் பற்றி கேள்விப்பட்ட காவல்துறையினர் ஒருங்கிணைந்த வேளாண் விற்பனை மையத்தில் தூக்கில் தொங்கிய மணிக்குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு சென்றனர். 

மேலும் தற்கொலை தொடர்பான வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். வேளாண்த்துறையில் போதி ஆட்கள் இல்லாமல் பற்றாக்குறையால் பணிச்சுமை ஏற்படுவதே இதற்கு காரணம் என்று வேளாண்துறை ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வாரம் ஏழு நாளும் உழைக்க வேண்டும் உடைகளை துவைக்கக்கூட நேரம் இல்லாமல் பணியாற்ற வேண்டிய சூழல் என்றும் எதிர்த்து கேட்டால் மெமோ கொடுப்பது சஸ்பெண்ட் செய்வது என்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஊழியர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

No comments

Copying is disabled on this page!