Breaking News

பொறையாரில் மேற்கூரை ஷெட் அமைத்த போது எதிர்பாராத விதமாக இரும்புபைப் உயர் மின்னழுத்த கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கியதில் வெல்டிங் தொழிலாளி ஒருவர் பலி.


பொறையாரில் உள்ள மரவாடி ஒன்றில் மேற்கூரை ஷெட் அமைத்த போது எதிர்பாராத விதமாக இரும்புபைப் உயர் மின்னழுத்த கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கியதில் வெல்டிங் தொழிலாளி ஒருவர் பலி. ஒருவர் படுகாயத்துடன் நாகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல்சிகிச்சை, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் அரசு மருத்துவமனை எதிரில் செந்தில்ராஜ்.54. என்பவரது  மரவாடியில் மேற்கூரை ஷெட் அமைக்கும்பணி நடைபெற்றது. 

அப்போது தொழிலாளர்கள் பைப்பை தூக்கி நிறுத்தியபோது எதிர்பாராத விதமாக அந்த பைப் மேலே சென்ற உயர் மின்னழுத்த கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கியதில் ஷெட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி வேலம்புதுக்குடி மாதா கோவில் தெருவை சேர்ந்த  தேவதாஸ் மகன் ஹென்ஸ்.23. என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடன் பணியாற்றிய வேலம்புதுக்குடி மோகன்மகன் கிறிஸ்டோபர்.24. என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பொறையாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். 

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அழைத்து செல்லப்பட்டுள்ளார். உயிரிழந்த ஹென்ஸ் கபடி வீரர் என்பதும் உள்ளுர் கபடி போட்டியில் பங்கேற்க உள்ள நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

No comments

Copying is disabled on this page!