முறையான அழைப்பு வந்தால் விசிக நடத்தும் மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில் கலந்து கொள்ள மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
முறையான அழைப்பு வந்தால் விசிக நடத்தும் மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில் கலந்து கொள்ள மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அ.தி.மு.க நிர்வாகி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி.
உளுந்தூர்பேட்டை அ.தி.மு.க நகர செயலாளர் துரை - தமிழரசி இல்லற திருமண வரவேற்பு நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு மணமகன் துரை.மோகன். மணமகள் தீபனா அவர்களை வாழ்த்தினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம் எம் சி சம்பத் பா மோகன், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில், மற்றும் முன்னாள் எம்எல்ஏ இரா. குமரகுரு, பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர் சந்தித்து பேசுகையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பெரியார் சிலைக்கு மாலைஅணிவித்த நிலையில் தமிழிசை சௌந்தர்ராஜன் விஜய் திராவிட கொள்கையை பின்பற்றுகிறாரா என விமர்சத்து நிலையில் அதை குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்து எடப்பாடி பழனிச்சாமி அதை விஜய் சாரிடமே கேளுங்கள் என்று கூறினார் தொடர்ந்து வி.சி.க நடத்தும் மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில் அ.தி.மு.க கலந்து கொள்ளுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் முறையான அழைப்பு வந்தால் அதைப்பற்றி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என கூறினார்.
No comments