புதுச்சேரி மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி காரைக்காலில் இந்தியா கூட்டணி சார்பில் முழு கடையடைப்பு போராட்டம்.
இந்நிலையில் மின் கட்டண உயர்வினை ரத்து செய்ய வேண்டும், பிரிபெய்டு திட்டத்தை கைவிட வேண்டும், மின்துறையை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் 'இந்தியா' கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் புதுச்சேரி மாநிலத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
காரைக்காலில் கடையடைப்பு காரணமாக காரைக்கால், திருப்பட்டினம், நிரவி, கோட்டுச்சேரி, நெடுங்காடு, திருநள்ளாறு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மதுபான கடைகளும் இன்று திறக்கப்படவில்லை. காரைக்காலில் புகழ்பெற்ற தர்ஹா மார்க்கெட் மற்றும் நேரு மார்க்கெட் உள்ளிட்டவையும் இன்று இயங்கவில்லை. இன்று மீன் விற்பனையும் நடைபெறவில்லை. இந்த போராட்டத்தின் காரணமாக தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், இயங்கவில்லை. இந்த பந்த் - ன் காரணமாக காரைக்காலில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
No comments