காரைக்காலில் ஓட்டுநர்கள் தினத்தை ஒட்டி பட்டாசு வெடித்து கேக் வெட்டி கொண்டாட்டம்.
மத்திய அரசு ஓட்டுநர்களை கௌரவிக்கும் வகையில் செப்டம்பர் 17ஆம் தேதியை ஓட்டுனர் தினமாக கொண்டாட அறிவித்திருந்தது இதனை அடுத்து காரைக்கால் மாவட்ட தனியார் பள்ளி ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் கேக் வெட்டியும் பட்டாசு வெடித்தும் ஓட்டுனர் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது ஓட்டுனர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. ஓட்டுனர்களின் முக்கியத்துவத்தை அறிந்து ஓட்டுநர்களை கௌரவிக்கும் வகையில் ஓட்டுநர் தினம் அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments