Breaking News

வில்லியனூரில் ரூ. 1.5 கோடி மதிப்பில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா துவக்கி வைத்தார்!


புதுச்சேரி வில்லியனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரியபேட் நீர்பாசன வடிகால் வாய்க்காலுக்கு (வினித் நகர், மாரியம்மன் கோயில் தெரு முதல் வி.மணவெளி பிரதான சாலை வரை) பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனக் கோட்டம் மூலம் ரூபாய். ஒரு கோடியே 54 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பீட்டில் புதியதாக கான்கிரீட் சுவர்களுடன் கூடிய வடிகால் வாய்க்கால் (PCC DRAIN) அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று காலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான  இரா. சிவா கலந்துகொண்டு வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியினை பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இதில், பொதுப்பணித்துறை நீர்பாசனக் கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷணன், உதவிப் பொறியாளர் மதிவாணன், இளநிலைப் பொறியாளர் சங்கர், ஊர்  முக்கியஸ்தர்கள் அங்காளன், செல்வநாதன், கிருஷ்ணன், கோவிந்தசாமி, சுப்புராயன், குமார், முருகையன், அன்பு என்கின்ற அன்பழகன், தயாளன், அன்பு நிதி, வெங்கடேசன், கோடி பிரகாசம், சேகர்னன, நாகராஜ்,, அஞ்சாபு லி, ரமேஷ், ஜெயபால், சிவக்குமார், மனோகர், மாரியப்பன், காளிதாஸ், பார்த்திபன், ராஜீவ் காந்தி, வீரமுத்து, அபி மன்னன், பிரகாஷ், தமிழ், அன்வர்தீன், செல்வராஜ், வேலு, வெங்கடாஜலபதி, பத்மநாபன், செல்வராஜ், ஆனந்தன், ஆர்யா, பிரசாந்த்,, வாசு, மங்கன், செந்தமிழ் மற்றும் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு. மோகன்தாசு, வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஹாலித், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சரவணன், ஆதி திராவிட அணி துணை அமைப்பாளர் காளி, ஆதிதிராவிடர் அணி துணைத் தலைவர் கதிரவன், சபரி, ரபீக், மிலிட்டரி முருகன், பாலகுரு, சேகர், நடராஜன், ராஜேந்திரன்,  கார்த்திகேயன், பவித்ரன், மானஸ்தன், முத்து, கிருஷ்ணராஜ், கோதண்டம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

No comments

Copying is disabled on this page!