Breaking News

சீர்காழி அடுத்த நாங்கூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் ஆய்வு.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த நாங்கூரில் அமைந்துள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆகியோர் கூட்டாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தனர். தொடர்ந்து நெல் மூட்டைகளை ஆய்வு மேற்கொண்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள்.

தொடர்ந்து செய்தியாளர்களை  சந்தித்த கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில், தஞ்சை நாகை மயிலாடுதுறையில் நேரடி கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகவும் முன்னதாக எருக்கூர் நவீன அரிசி ஆலையில்  அமைந்துள்ள சைலோவை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.  மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரையிலும் 130 நேரடி கொள்முதல் நிலையங்கள்  திறக்கப்பட்டு 124 நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் நடைபெற்று வருவதாகவும் இதுவரையிலும் 34,859 ஆயிரம் மெட்ரிக் டன் மேல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 6444 விவசாயிகளுக்கு கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு 70 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  கடந்தாண்டு 34.46 மெட்ரிக் டன் அளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டு 8004 கோடி விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். 

மேலும் அதிகப்படியான விவசாயம் மயிலாடுதுறை நாகை திருவாரூர் தஞ்சை மாவட்டங்களில் தான் நடைபெறுவதாகவும் தற்போது மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டாலும் குருவை விவசாயம் முடிவுற்ற நிலையில் கொள்முதல் நிலையங்களில் போதிய தார்பாய்கள் இல்லாததால் அதிககட்டினத்திற்கு வாங்கப்படுவதாகவும்மேலும் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் கையூட்டு  வாங்கப்படுவதை தடுத்த வேண்டுமென விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அதனை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டு இது போல் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.தற்போது காலநிலை மாற்றத்தால் மழையால் விவசாயிகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அறுவடை முடிந்து நெல் கொள்முதல் நிலையத்திற்கு  கொண்டு வருவதும் மழையால்  ஈரப்பதம் பாதிக்கப்படுவதால் அதற்கும் எவ்வாறு மாற்று ஏற்பாடு செய்யப்படுவது என அதிகாளுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் தெரிவித்தனர். 

கடந்த மூன்று ஆண்டுகளில் முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கூடுதலாக பல்வேறு பகுதிகளில் நெல் பாதுகாப்பு குடோன் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தரம் உயர்த்தப்பட்டு நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.மேலும் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு  உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தலைமைச் செயலாளர் ராதா கிருஷ்ணன்   தெரிவித்தனர்.

இவ்வாய்வின்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் சதீஷ்குமார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமல்ராஜ் , மாவட்ட வழங்கல் அலுவலர் பானுகோபன், சீர்காழி வட்டாட்சியர் அருள்ஜோதி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

No comments

Copying is disabled on this page!