சமூக சேவையில் விழுப்புரத்தின் கவனத்தை ஈர்த்த பட்டதாரி இளைஞர் சந்துரு.
5 ஆண்டுகளுக்கு முன்பு சந்துரு என்ற தனி நபரால் தொடங்கப்பட்ட இந்த மனிதம் காப்போம் குழுவில் என்றளவில் 600 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பெண்கள் இனைந்து பலர் சேவையை செய்து வருகின்றனர், தமிழக அரசின் சார்பில் பாராட்டு சான்றிதழ்கள், பசுமை முதன்மையாளர் விருது மற்றும் ரூபாய் 1 லட்சம், டாக்டர் அப்துல் கலாம் விருதுகள், அறம் விருதுகள், என பல்வேறு அமைப்புகள் சமூக தொண்டு நிறுவனங்கள் தோழர் சந்துரு மற்றும் மனிதம் காப்போம் குழுவை பாராட்டி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசுடன் இணைந்து ஒரு கோடி பண விதைகள் நடும் நெடும்பனியையும் ஒருங்கிணைத்து வருகிறார் ,சமீபத்தில் நடிகர் கார்த்தி சந்துரு அவர்களின் சேவையை பாராட்டி 1 லட்சம் காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார், தொடர்ந்து மக்களுக்காக மக்கள் சேவை செய்து வரும் சந்துரு அவர்களையும் மனிதம் காப்போம் குழு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களையும்பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
No comments