Breaking News

உளுந்தூர்பேட்டை யில் பேரறிஞர் அண்ணா 115 பிறந்தநாளை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தனியார் மண்டபத்தில் திமுக ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் மற்றும் நகர செயலாளர் டேனியல்ராஜ் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது.


இதில்  கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் அவர்கள் கலந்து கொண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி பேரறிஞர் அண்ணா  பிறந்தநாள் விழா மற்றும் செப்டம்பர் 16 கழகத்தின் பவள விழா கொண்டாட வேண்டும் என்றும் 17ஆம் தேதி  பெரியார் 145 வது பிறந்த நாள் விழா  குறித்து நிர்வாகிகளுக்கு  சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில்  உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன், நகரமன்ற தலைவர் திருநாவுக்கரசு, மாவட்ட கவுன்சிலர் பிரியா பாண்டியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அருண், நகர மன்ற உறுப்பினர்கள்  கலா சுந்தரமூர்த்தி, ஜெயந்தி மதியழகன், மாலதி ராமலிங்கம், செல்வகுமாரி ரமேஷ்பாபு, குமரவேல், ராஜவேல், மனோபாலன், மற்றும் மாவட்ட நகரம் ஒன்றியம் கிளைநிர்வாகிகள் திரளாக கலந்து  கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!