ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றியம் திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் இன்று மாலை 5ணியளவில் மண்டலவாடி லட்சுமி மஹாலில் பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் க.உமா கன்ரங்கம் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தி, புதிய உறுப்பினர்கள் அட்டை மற்றும் தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலர், தென்திசையின் தீர்ப்பு 40/40 நூல்களை வழங்கினார்கள். உடன் ஒன்றிய அவைத்தலைவர் கோபிநாதன் மாவட்ட கவுன்சிலர் சிந்துஜா ஜெகன், சிவப்பிரகாசம் ஒன்றிய துணை செயலாளர் வைரமணி, வள்ளி கண்ணன் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஜனனி மோகன்ராஜ், எழிலரசி குமார், செந்தில்குமார், ரேவதி சுரேஷ் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல் ஒன்றிய பொருளாளர் திருப்பதி, பாலாஜி ஊராட்சி மன்ற தலைவர்கள் துணைத் தலைவர்கள் கிளை செயலாளர்கள், பிரதிநிதிகள், மற்றும் ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
No comments