Breaking News

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர் மஸ்தான் பங்கேற்பு.


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் நகரம் மற்றும் கிழக்கு ஒன்றிய திமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் மரக்காணத்தில் நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட துணை செயலாளரும் பேரூர் கழக செயலாளருமான ரவிக்குமார், மரக்காணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தயாளன் ஆகியோர் தலைமை தாங்கினார். அவைத்தலைவர்கள் தியாகராஜன், இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் செஞ்சி.மஸ்தான் கலந்து கொண்டு பேசுகையில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு 3 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. 

இதனால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் நாம் செய்த சாதனைகளை கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாலே வெற்றி நிச்சயம் அனைவரும் திமுகவிற்கு வாக்களிப்பார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் 234  தொகுதிகளில் திமுக வெற்றி பெறும். சென்னையில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும். மேலும் இதில் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர்.சேகர், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் சீத்தாபதி சொக்கலிங்கம், மாவட்ட பொருளாளர் ரமணன், ஒன்றிய செயலளர்கள் பழனி, ரவிச்சந்திரன் மரக்காணம் பேரூராட்சி மன்ற தலைவர் வேதநாயகி ஆளவந்தார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் புஷ்பவல்லி குப்புராஜ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன்,மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், மத்திய ஒன்றிய திமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் திண்டிவனம் அடுத்த சிறுவாடி தனியார் மண்டபத்தில் ஒன்றிய அவைத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மரக்காணம் மத்திய ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார். மேலும் இதில் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர்.சேகர் ,மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் சீத்தாபதி சொக்கலிங்கம்,மாவட்ட பொருளாளர் ரமணன்,மாவட்ட கழகத் துணைச் செயலாளர் ரவிக்குமார்,மரக்காணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தயாளன்,மரக்காணம் மேற்கு ஒன்றிய  செயலாளர் பழனி,மாநில பொதுக்குழு உறுப்பினர் கதிரேசன்,மாவட்ட கவுன்சிலர் புஷ்பல்லி குப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை  அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  மேலும் இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் நல்லாவூர்  கண்ணன், அர்ஜுனன், திமுக நிர்வாகிகள் செல்வம்,சுரேஷ்குமார், சுமதி பார்த்தசாரதி, ரவிசங்கர், வடிவேல், பாபுசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!