Breaking News

பொறையாரில் திமுக கொடி நிர்வாகிகளுக்கு வழங்கிய பூம்புகார் எம்எல்ஏ.


தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் இல்லந்தோறும் திமுக கொடி பறக்கட்டும் என்ற அறிவிப்புக்கு இணங்க திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் பேரியக்கம் 75 ஆண்டுகளாக மக்களுக்கு பணியாற்றி இந்த ஆண்டு தனது பவள விழா நிறைவினை கொண்டாடும் விதமாக திமுக கொடிகளை வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாரில் திமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் திமுக கொடிகளை நிர்வாகிகளுக்கு வழங்கினார் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கழக கொடிகளை பெற்றுக் கொண்டனர் அனைவரும் அந்தந்த பகுதிகளில்  கழகக் கொடிகளை மூத்த நிர்வாகிகளின் கரங்களால் ஏற்றி பட்டொளி வீசி பறந்திட செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. 

No comments

Copying is disabled on this page!