திருவள்ளூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் (Dcs) டிஜிட்டல் பயிர் கணக்கீடு பணியினை புறக்கணித்து திருவள்ளூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் (Dcs) டிஜிட்டல் பயிர் கணக்கீடு பணியினை புறக்கணித்து திருவள்ளூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட பொருளாளர் பிரகாஷ் பாலாஜி தலைமை வகித்து கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் டிஜிட்டல் பயிர் கணக்கீடு பணிக்கு, பிற மாநிலங்களைப் போல் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
ஆந்திரா கேரளா கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இப்பணியை செயல்படுத்துவது போலவே தமிழ்நாட்டிலும் இப்பணியை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் திருவள்ளூர் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, மாவட்ட நிர்வாகிகள் மகேஷ், விஜய்காந்த், மிதுன்குப்தா புகழேந்தி உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் எனவும் இறுதியாக திருத்தணி ரகுவரன் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை முடித்தார்
No comments