நாட்றம்பள்ளியில் கல்குவாரி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி பாரத ஸ்டேட் வங்கி எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாட்றம்பள்ளி தாலுக்கா மல்லப்பள்ளி சுற்றுவட்டார சுற்று சுழலை பாதுக்காக்க கல்குவாரி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் முருகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சுந்தரேசன் மற்றும் விவசாய சங்க மாவட்ட செயலாளர் முல்லை மாவட்ட துணை செயலாளர் நத்தி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
இதில் கிராமப்புற பகுதிகளில் கல்குவாரி அமைக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு நீர் மாசு அடைகிறது கல் குவாரிகள் அமைக்கப்பட்டு பாறைகள் வெட்டி எடுக்க வெடி வைக்கும் பொழுது அருகில் உள்ள வீடுகள் பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பெருமளவில் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது எனவே மல்லப்பள்ளி பகுதியில் உள்ள கல்குவாரியின் ஒப்பந்தத்தை ரத்து செய்து வேண்டும் இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஆனந்தன் முருகன் சங்கர் ராஜா வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
No comments