காங்கிரஸ் கட்சியின் சார்பாக தெருமுனைப் பிரச்சாரம் உளுந்தூர்பேட்டை தொகுதி எலவனாசூர்கோட்டையில் நடைபெற்றது.
நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் மேற்கொண்ட கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4000 கிலோமீட்டர் நடைபயணமாக நடந்த இந்திய ஒற்றுமை நடை பயணம் மற்றும் மணிப்பூர் முதல் ராஜஸ்தான் வரை நடைபெற்ற இந்திய சமூக நீதி பயணம் ஆகியவற்றின் இரண்டாம் ஆண்டு நிறைவு தினத்தை போற்றுகின்ற வகையில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடத்திட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ அவர்களின் ஆணைக்கிணங்க கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை எலவனாசூர்கோட்டை உள்ள ராஜீவ் காந்தி சிலை அருகில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் சின்னசேலத்தார் பி.எஸ்.ஜெய்கணேஷ் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.
முன்னிலை, வட்டாரத் தலைவர்கள், பெரியசாமி, கே.என். குமார், ரவிச்சந்திரன், கலியன், ராமசாமி, கோவிந்தன், கலைமணி,வரவேற்புரை, கோட்டை விஜயகுமார் வட்டார தலைவர், கள்ளக்குறிச்சி வட்டார தலைவர் சரண்ராஜ், மீடியா முருகன்,கட்சியின் முக்கிய நிர்வாகிகள், ஏழுமலை, செம்மலை, கண்ணன், கலியன், சிவலிங்கம், சேகர், அன்பரசன், கந்தன், ஆனந்தன், அர்ஜுனன், செல்லதுரை, சீனிவாசன், கிருஷ்ணமூர்த்தி, நன்றி உரை, சிவநாதன் அஜீஸ் நகர், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments