Breaking News

சீர்காழியில் எச்.ராஜாவை கண்டித்து காங்கிஸார் ஆர்ப்பாட்டம்.


மயிலாடுதுறை மாவட்டம்,சீர்காழியில் எச்.ராஜாவை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில்ராகுல் காந்தியை தரக்குறைவாக பேசிய பாஜக தமிழக இடைக்கால பொறுப்பாளர் ராஜா வை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் சரவணன் வரவேற்றார். 

இதில் வட்டார தலைவர்கள் பாலசுப்பிரமணியன்,ராதாகிருஷ்ணன், தியாக கார்த்திகேயன், ரவி, அன்பழகன் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளர் கணிவண்ணன் கண்டன உரையாற்றினார் இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பி எஸ் ராஜேந்திரன், சிவராமன், மயிலாடுதுறை நகர தலைவர் ராமானுஜம், அன்பழகன், ஒன்றிய குழு உறுப்பினர் அறிவழகன் ஊராட்சி மன்ற தலைவர் கிள்ளி வளவன், நகர பொதுச் செயலாளர் கலியபெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர் முடிவில் நகர செயலாளர் மொரார்ஜி நன்றி உரையாற்றினார்.

No comments

Copying is disabled on this page!