ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக மற்றும் சிவசேனா கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி காவல் நிலையத்தில் புகார்.
இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் ராகுல் காந்தியின் கருத்துக்காக அவரது நாக்கை துண்டிப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்குவேன் என்று ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாஜகவினர் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் காங்கிரஸ் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பாஜக மற்றும் சிவசேனா எம்எல்ஏக்கள் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி தலைமையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி உட்பட காங்கிரசார் பெரிய கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதேபோல், காங்கிரஸ் கட்சியின் மாநில சிறப்பு அழைப்பாளர் வெங்கடாஜலபதி தலைமையில் காலாப்பட்டு தொகுதி காங்கிரஸ் ஆர் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் நெட்டப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் சார்பில், நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
No comments