Breaking News

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் .


சிவகங்கை மாவட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் ஆர்.லால்வேனா மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித்,  முன்னிலையில், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.17.80 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள்  மற்றும் திட்ட செயல்பாடுகள்  ஆகியன குறித்து களஆய்வுகள் மேற்கொண்டார். 

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சி, திருப்புவனம் மற்றும் சிவகங்கை ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் காரைக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள்  மற்றும் திட்ட செயல்பாடுகள்  ஆகியன குறித்து  மாவட்ட ஆட்சித்தலைவர்   திருமதி ஆஷா அஜித்,  முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் திரு.ஆர்.லால்வேனா, களஆய்வுகள் மேற்கொண்டார். 

அதில், திருப்புவனம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ16.52 கோடி மதிப்பீட்டில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகள் குறித்தும், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  மடப்புரம் கிராமத்தில் ரூ.08.40 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாய மயானத்தில் கட்டப்பட்டு வரும் காத்திருப்போர் அறை மற்றும் சுற்றுசுவர் ஆகியவைகளின் கட்டுமானப் பணிகள் குறித்தும், தூதை கிராமத்தில் ரூ.18.42 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் கட்டுமானப் பணிகள் குறித்தும்,  திருப்பாச்சேத்தி ஊராட்சிக்குட்பட்ட திருப்பாச்சேத்தி தெற்கு நடுநிலைப்பள்ளியில் ரூ.98.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 02 தளங்கள் கொண்ட கூடுதல் வகுப்பறை கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் குறித்தும், மலைவராயன்னேந்தல் ஊராட்சிக்குட்பட்ட செம்பரயநேந்தல் கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.03.50 இலட்சம் மதிப்பீட்டில்  கட்டப்பட்டு வரும் பயனாளியின் இல்லம் கட்டுமானப் பணிகள்  ஆகியன குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. 

மேலும், சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மதகுபட்டி ஊராட்சி பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் குறித்தும், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அம்மையத்தில் மேம்படுத்த வேண்டிய கட்டமைப்பு வசதிகள் ஆகியன குறித்தும், காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சியின் சார்பில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள், முடிவுற்ற திட்டப்பணிகள், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், தேவையான நிதி நிலை ஆகியன குறித்து கலந்த ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டும், காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட மானகிரி பகுதியிலுள்ள  கூத்தலூர் A1012- தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் முழுநேர நியாய விலைக்கடையின் செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வரும் குடிமை பொருட்கள், குடிமை பொருட்களின் தரம், பொருட்களின் இருப்பு நிலை உள்ளிட்டவைகள் தொடர்பாகவும், தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்தில் மேற்கொள்ளப்படும் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் குறித்தும், பல்வேறு வகையான சான்றுகள் பெறுவதற்கான விண்ணப்பித்தின் எண்ணிக்கை, நிலுவையிலுள்ள விண்ணப்பங்களின் நிலை ஆகியன குறித்தும், புதுவயல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலுள்ள புறநோயாளிகள் பிரிவு, மருந்தகங்கள், மருந்து கிடங்குகள், நோயாளிகளின் வருகைகள் குறித்த பதிவேடுகள் ஆகியன குறித்தும், அப்பகுதியிலுள்ள மக்களைத் தேடி மருத்துவ திட்ட பயனாளிகளை சந்தித்து திட்டப் பயன்கள் குறித்தும், காரைக்குடி மாநகராட்சி பகுதியிலுள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு கல்லூரி மாணவர் விடுதியின் செயல்பாடுகள் மற்றும் மேம்படுத்த வேண்டிய வசதிகள் குறித்தும்,   

காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையின் செயல்பாடுகள், நோயாளிகளின் வருகைகள் குறித்த பதிவேடுகள், மருந்து இருப்புக்கள், தேவையான மருத்துவ உபகரணங்கள் ஆகியன குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுடன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் கள ஆய்வுகள் மேற்கொண்டார்.   இந்த ஆய்வின் போது,  நடைபெற்று வரும் பல்வேறு கட்டுமானப் பணிகளை விரைந்து தரமான முறையில் முடிக்கப்பெற்று பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் அவர்கள் அறிவுறுத்தினார். 

 இந்த ஆய்வின் போது, தேவகோட்டை சார் ஆட்சியர் திரு.ஆயுஷ் வெங்கட் வட்ஸ்,  காரைக்குடி மாநகராட்சி மேயர் திரு.முத்துதுரை  காரைக்குடி மாநகராட்சி ஆணையாளர் திருமதி சித்ரா சுகுமார் அவர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர். 

No comments

Copying is disabled on this page!