Breaking News

குத்தாலத்தில் மாணவியர் விடுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மாணவர்களிடம் பல்வேறு நிலைகள் குறித்து கேட்டு அறிந்தார்.


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா குத்தாலம் பேரூராட்சி பகுதியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மாணவியர் விடுதியில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் அங்கு தங்கியுள்ள மாணவிகளிடம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கலந்துரையாடல் செய்தார்.

மேலும் மாணவியர் விடுதியில் மாணவியர்களுக்கு கிடைக்கும் உணவு அடிப்படை வசதிகள் குறித்து மாணவிகளிடம் நேரில் கேட்டறிந்தார் மாணவிகளுக்கு என்ன தேவை என்பதையும் அவர்களிடம் கேட்டறிந்தார் ஆய்வின்போது தனி துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் கீதா மயிலாடுதுறை கோட்டாட்சியர் விஷ்ணு பிரியா பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் ரவி குத்தாலம் வட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

No comments

Copying is disabled on this page!