வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் வே. இரா. சுப்புலட்சுமி.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்களின் ஆய்வு குழு தலைவர் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி. நந்தகுமார் தலைமையில் ஆய்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர், திமுகவின் மாநில மகளிர் அணி பிரச்சாரக் குழு செயலாளர் வி.அமுலு விஜயன், மற்றும் அரசு அதிகாரிகள் திமுக ஒன்றிய செயலாளர் ஒன்றிய பெருந்தலைவர் சத்யானந்தம், திமுகவின் மாவட்ட, நகர நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள் என அனைவரும் இந்த வளர்ச்சிப் பணி ஆய்வில் கலந்து கொண்டனர்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்.
No comments