Breaking News

சிவகங்கை மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப்பணிகளின் நிலை மற்றும் திட்டப் பயன்கள் ஆகியன குறித்து கலந்தாய்வுக் கூட்டமும் மேற்கொண்டார்.


சிவகங்கை மாவட்டம் மாவட்ட  கண்காணிப்பு  அலுவலர்  மற்றும்  உணவு  பாதுகாப்புத்துறை ஆணையாளர்  ஆர்.லால்வேனா, மாவட்ட  ஆட்சித்தலைவர்  திருமதி  ஆஷா  அஜித்,  தலைமையில்,  அனைத்துத் துறைகளின் சார்பில்  மாவட்டத்தின் பல்வேறு  பகுதிகளில்  மேற்கொள்ளப்பட்டு  வரும்  வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக கள ஆய்வுகள் மேற்கொண்டு,   பணிகளின் நிலை மற்றும் திட்டப் பயன்கள் ஆகியன குறித்து கலந்தாய்வுக்  கூட்டமும்  மேற்கொண்டார்.  

சிவகங்கை மாவட்டம், அனைத்துத் துறைகளின் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் திரு.ஆர்.லால்வேனா, அவர்கள்,  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித்,  தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், அனைத்துத்துறை சார்ந்த முதல்நிலை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் மேற்கொண்டு தெரிவிக்கையில், சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்களும், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கும் கிடைக்கப் பெறச் செய்யும் வகையில், மாவட்ட நிர்வாகத்தினால் சிறப்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அப்பணிகள் தொடர்பாகவும், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அனைத்துப் பகுதிகளிலும் மேம்படுத்தும் விதமாகவும், நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக, தொடர்ந்து களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   அதனடிப்படையில், நேற்றைய தினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் திட்ட செயல்பாடுகள் குறித்து கள ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டது.  

அதுமட்டுமன்றி, அனைத்துத்துறஅரசு அலுவலர்களையும் ஒருங்கிணைத்து, துறை ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து, சம்பந்தப்பட்ட முதன்மை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டமும் மேற்கொள்ளும் பொருட்டு, பணிகளின் நிலை குறித்து மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, அரசின் பல்வேறு துறைகளின் சார்பில், துறை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் அதன் பயன்கள், தேவையான நிதிநிலைகள் மற்றும் செலவினங்கள் ஆகியன குறித்தும், துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் ஆகியன குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாலோசனை மேற்கொள்ளும் பொருட்டு, கலந்தாய்வு கூட்டம்   நடைபெற்றது.

ஒவ்வொரு துறைகளின் சார்பில் இதுவரை மேற்கொண்ட திட்டப்பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், தேவையான நிதி நிலைகள் ஆகியன தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்கள் எடுத்துரைத்து, அவைகள் தொடர்பான விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்கலாம். அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கைகளுடன், தங்களது துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் திரு.ஆர்.லால்வேனா தெரிவித்தார். 

அதனைத்தொடர்ந்து, கூட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை, உயர் கல்வித்துறை,  ஊரக வளர்ச்சித்துறை,  நகராட்சி நிர்வாம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை,  வருவாய்த்துறை, சத்துணவு திட்டம், சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், மக்களுடன் முதல்வர் திட்டம், கனிம வளத்துறை, வேளாண்மைத்துறை, வனத்துறை, பொது சுகாதாரத்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்  உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளின் சார்பில்  மேற்கொள்ளப்பட்டு வரும்  திட்ட செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து, புள்ளி விபரங்களுடன் எடுத்துரைத்தனர்.

முன்னதாக, சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாலுகோட்டை  ஊராட்சி பகுதியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2022-2023ன் கீழ்  நாலுகோட்டை தரிசு நிலத்தொகுப்பின் கீழ் பழ மரக்கன்றுகள் நடவு செய்தல் (Mass Planting) பணிகள் குறித்தும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணாக்கர்களின் கற்றல் திறன் மற்றும் மாணாக்கர்களுக்கு கற்பித்தல் முறை, பள்ளியில் மேம்படுத்த வேண்டிய கூடுதல் வசதிகள் ஆகியவைகள் குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் லால்வேனா, மாவட்ட ஆட்சித்தலைவர்   திருமதி ஆஷா அஜித், அவர்களுடன் கள ஆய்வுகள் மேற்கொண்டார்.  

இந்நிகழ்ச்சியில், தேவகோட்டை சார்  ஆட்சியர் .ஆயுஷ் வெங்ட்வட்ஸ்  மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.செல்வசுரபி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.முத்துக்கழுவன்,  சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் திரு.விஜயகுமார், மகளிர் திட்ட அலுவலர் திருமதி.கவிதப்பிரியா,  உட்பட அனைத்துத்துறை அரசு முதல்நிலை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!