குடிமை பணிகளுக்கான குரூப் 2 தேர்வு நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான குரூப் 2 தேர்வு நடைபெற்றது இன்று நடைபெற்ற குரூப் 2 தேர்வில் பலர் ஆர்வத்துடன் தேர்வு எழுதினர் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏவிசி கலை கல்லூரியில் நடைபெற்ற அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான குரூப் 2 தேர்வை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தேர்வு எழுதும் நிலை குறித்தும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் அப்பொழுது மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணு பிரியா மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராணி மற்றும் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 8293 பேர் தேர்வு எழுத தகுதி பெற்று இருந்த நிலையில் 6227 பேர் தேர்வு எழுதினர் சுமார் 2066 பேர் தேர்வு எழுதவில்லை என கூறப்படுகிறது.
No comments