தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களை தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பல்வேறு இடங்களில் ஆய்வு.
வானாதிராஜபுரம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை ஆய்வு செய்து, பொதுத்தேர்விற்கு மாணவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். 100 சதவீதம் தேர்ச்சி பெற அனைவரும் நன்கு கற்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர், வானாதிராஜபுரம் கிராமத்தில் வடக்கு தெரு குளம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பனைவிதை நடும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து, குத்தாலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, 1 மகளிர் சுய உதவிக்குழுவிற்கு சுயதொழில் தொடங்க ரூ.3 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
தொடர்ந்து, குத்தாலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் விவசாயிகளின் நெல் தங்கு தடையின்றி கொள்முதல் செய்யப்படுகின்றதா என்பதனை விவசாயிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், குத்தாலம் கால்நடை மருத்துவமனையில் கால்நடைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளையும், குத்தாலம் நியாயவிலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் தங்கு தடையின்றி முறையாக வழங்கப்படுகின்றதா என்பதனையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
இவ்வாய்வின்போது, கூடுதல் ஆட்சியர்.மு.ஷபீர் ஆலம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் .சதீஷ்குமார், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா, மாவட்ட வழங்கல் அலுவலர் பானுகோபன், வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் .விஷ்ணுபிரியா, கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் ரவிசந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசரஸ்வதி, குத்தாலம் வட்டாட்சியர் சத்யபாமா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஷோபனா.புவனேஷ்வரி ஊராட்சிமன்ற தலைவர் கவிதா ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments