புதுச்சேரி நெட்டப்பாக்கம் மற்றும் கலிதீர்த்தாள்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கலிதீர்த்தாள்குப்பம் கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.பள்ளிகளில் வகுப்பறைகள், நூலகம், ஆய்வுக்கூடம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளனவா, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சரியான நேரத்தில் வருகை புரிகின்றனரா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து பாடத்திட்டத்தில் மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் குறித்து கேட்டறிந்தார். மேலும் மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தில் என்னவாக வர விரும்புகிறீர்கள் என கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் அவர்கள், அந்த இலட்சியத்திற்காக மாணவர்கள் பள்ளிப் பருவத்திலிருந்தே தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments