Breaking News

பந்த் போராட்டத்தில் இண்டியா கூட்டணிக்கும் அரசுக்கும் இடையில் இருந்த மறைமுக உறவு வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது என்று புதுச்சேரி அதிமுக விமர்சித்துள்ளது.


புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன், மின் கட்டண உயர்வு தொடர்பாக நடைபெற்று வரும் பந்த் போராட்டத்தில் இண்டியா கூட்டணிக்கும், அரசுக்கும் இருந்த மறைமுக உறவு வெட்ட வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. 

இண்டியா கூட்டணியை சேர்ந்தவர்கள் தவளக்குப்பம், திருக்கனூர், மேட்டுப்பாளையம், அரியாங்குப்பம், காரைக்கால், கோரிமேடு, வெங்கடசுப்பையா சிலை உள்ளிட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். பந்த் அறிவித்த காங்கிரஸ் தலைவர்கள், திமுக எம்எல்ஏ-க்கள் மற்றும இண்டியா கூட்டணியின் கட்சி தலைவர்கள் மீது புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ்ன வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றார்.

No comments

Copying is disabled on this page!