முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 28,404 பேர் பதிவு செய்து பங்கேற்பு. மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் போட்டிகளை தொடங்கி வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 10,405 பேர் பதிவு செய்து மாநில அளவில் 27வது இடத்தை மயிலாடுதுறை மாவட்டம் பிடித்திருந்தது. இந்த ஆண்டு 28,404 பேர் பதிவு செய்து மாநில அளவில் 13வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு மாநில அளவில் முதலமைச்சர் கோப்பை போட்டியில் 16 பதக்கங்கள் பெற்று மயிலாடுதுறை மாவட்டம் தமிழக அளவில் 10வது இடத்தையும், டெல்டா மண்டல அளவில் முதலிடமும் பெற்றது. முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் மாநில அளவிலான போட்டியில் வெற்றிபெறுபர்களுக்கு 3 சதவிகிதம் வேலை வாய்ப்பில் வாய்ப்பலிக்கப்படும், வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கபரிசு வழங்கப்படும் எனவே மாணவர்கள், இளைஞர்கள் இதனை பயன்படுத்திகொள்ள வேண்டும் என்று போட்டியை துவங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இன்று துவங்க்பட்ட போட்டிகள் வருகின்ற 24ம்தேதி வரை நடைபெறுகிறது. இதில் நகராட்சி தலைவர் செல்வராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெகநாதன், மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு, நகராட்சி கவுன்சிலர் கீதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments