திண்டிவனம் கல்லூரி சாலை மும்முனை சாலை சந்திப்பு மேம்பாட்டு பணிகள் நெடுச்சாலை துறை தலைமை பொறியாளர் நேரில் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நெடுச்சாலை துறை உட்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிந்தசாமி கலைக் கல்லூரி சாலையில் 2 கிலோமீட்டர் மும்முனை சாலை சந்திப்பு மேம்பாடு செய்தல் பணியை 2023-2024 சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2.5 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது .இந்நிலையில் இப்பணியை சென்னை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் சத்திய பிரகாஷ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை பருவ மழைக்கு முன் விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார்,கோட்ட பொறியாளர் உத்தண்டி,உதவி கோட்டப் பொறியாளர் கவிதா மற்றும் உதவி பொறியாளர் தீனதயாளன் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments