Breaking News

செல்லப்பன் வித்யாமந்திர் பள்ளி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலமைச்சர் கிரிக்கெட் கோப்பையை வென்றது.


சிவகங்கை மாவட்ட அளவிலான 2024 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கிரிக்கெட் கோப்பைக்கான போட்டியில் காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஒரு மாபெரும் சாதனையை படைத்துள்ளது. இந்த வெற்றியால் பள்ளியின் விளையாட்டு அரங்கில் பெருமையும், ஒரு வெற்றி வரலாறாகவும் அமைந்துள்ளது.

அதிரடி இன்னிங்ஸ் 201 ரன்கள், 10 ஓவர்களில் செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளியின் அணியும், காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் ஜூனியர் அணியும் மோதிய ஒரு முதல் சுற்று போட்டியில், செல்லப்பன் வித்யா மந்திர் அணி 10 ஓவர்களில் 201/0 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. இந்த இலக்கு அங்கு இருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.


இந்த வெற்றிக்கு அடிப்படை காரணமாக இருந்த மாணவர்கள் கைலாஷ் மற்றும் ரித்தீஷ் ராஜனின் அசத்தலான ஆட்டம் கைலாஷ் வெறும் 33 பந்துகளில் 101 ரன்களை அடித்து அங்கு அனைவரையும் கவர்ந்தார். ரித்தீஷ் ராஜன் தனது 27 பந்துகளில் 74 ரன்களை குவித்தார். இது அணியின் வெற்றியை உறுதி செய்தது.


மகரிஷி ஜூனியர் அணியின் பதில் இன்னிங்ஸ்: பின்னர் பேட்டிங் செய்த மகரிஷி ஜூனியர் அணி, செல்லப்பன் வித்யா மந்திர் அணியின் பந்துவீச்சில் திணறியதுடன், அவர்களின் இன்னிங்ஸ் 38 ரன்களுக்கு முடிவடைந்தது. செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி அணியின் சிறந்த பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் போராடிய மகரிஷி அணி, வேகமாக விக்கெட்களை இழந்தனர்.


இறுதி சுற்று - வெற்றிக்கான அசத்தலான பயணம் செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி அணியும், காரைக்குடி ராமநாதன் செட்டியார் பள்ளி அணியும் மோதிய இறுதிப் போட்டியில்மிகவும் பரபரப்பான மற்றும் உற்சாகமாக நடைபெற்றது நாணய சுண்டுதலில் வெற்றி பெற்ற ராமநாதன் செட்டியார் பள்ளி பந்துவீச்சை தேர்வு செய்தது.


செல்லப்பன் வித்யா மந்திர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 139 ரன்களை குவித்தது. இங்கே மீண்டும் கைலாஷ் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார், 69 ரன்களை மிக வேகமாக அடித்து அணியை முன்னணியில் கொண்டுவந்தார். ரித்தீஷ் ராஜன் 47 ரன்கள் சேர்த்து, அவுட் ஆகாமல் நின்றார். இது அணியின் மதிப்பைப் பெருமையாகக் கட்டியெழுப்பியது.


ராமநாதன் செட்டியார் அணியின் பேட்டிங் - வெற்றிக்கு 91 ரன்கள் வித்தியாசம் அதன் பிறகு பேட்டிங் செய்த ராமநாதன் செட்டியார் அணி, செல்லப்பன் வித்யா மந்திர் பந்துவீச்சாளர்களின் அழுத்தமான பந்துவீச்சால் போராடி, 10 ஓவர்களில் வெறும் 48 ரன்களுக்குத் 5 விக்கெட்களை இழந்தனர். மிகச் சிறப்பாக பந்துவீசிய செல்லப்பன் வித்யா மந்திர் அணியின் வீரர்கள், எதிரணியின் விக்கெட்களை விரைவாக வீழ்த்தினர்


இந்த வெற்றியின் மூலம், செல்லப்பன் வித்யா மந்திர் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் கோப்பையை வென்று, 2024 ஆம் ஆண்டின் முதலமைச்சர் கிரிக்கெட் கோப்பையை எடுத்து செல்வதுடன், சிவகங்கை மாவட்டத்தின் விளையாட்டு வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.


அணியின் தலைவரான சித்தார்த் வெற்றிக்குப் பின்னால் தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்: “எங்கள் அணியின் ஒற்றுமை நம்பிக்கை மற்றும் உழைப்பின் விளைவாகவே இந்த வெற்றி எங்கள் பயிற்சியாளர் எங்களை வழிநடத்தியது வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.


கைலாஷ் தனது சாதனை குறித்து பேசியபோது, 'நான் அதிக உற்சாகத்துடன் விளையாடினேன். எங்கள் அணியின் வெற்றி முக்கியமானது. எனவே என் ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்த விரும்பினேன்," என்றார்.


பள்ளியின் பாராட்டு வெற்றியின் போது பள்ளி நிர்வாகமும் பெருமையடைந்தது. "மாணவர்களின் விளையாட்டு திறன், அவர்கள் பெற்ற பயிற்சியின் முடிவாகவே இந்த வெற்றி உள்ளது. இந்த சாதனையை தொடர்வதற்கான உற்சாகம் மேலும் மாணவர்களுக்கு ஊக்கம் தரும், இந்த வெற்றி கடந்த ஆண்டு வெற்றியை தொடர்ந்து வந்துள்ளது. இந்த வெற்றி செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளியின் மாணவர்களின் திறமையையும், பள்ளியின் விளையாட்டு பயிற்சியின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது என்று பள்ளி தாளாளர் திரு.சத்யன் அவர்கள் தெரிவித்துக் கொண்டார்.

No comments

Copying is disabled on this page!