புதுவையில் சென்டாக் மூலம் நடைபெறும் முதுநிலை பல் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான மாணவா் இறுதி சோ்க்கையை நிறுத்த வேண்டும் என சுயேட்சை எம்எல்ஏ நேரு.
புதுவையில் சென்டாக் மூலம் நடைபெறும் முதுநிலை பல் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான மாணவா் இறுதி சோ்க்கையை நிறுத்த வேண்டும் என சுயேட்சை எம்எல்ஏ நேரு தலைமையில் சமூக நல அமைப்புகள் முதல்வா் ரங்கசாமியிடம் வலியுறுத்தினா்.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் ரங்கசாமியை உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை உறுப்பினா் நேரு தலைமையில் பொதுநல அமைப்பினர் மனு அளித்தனா். அவர்கள் அளித்துள்ள மனுவில், புதுவையில் முதுநிலை பல் மருத்துவப் படிப்பு, பொறியியல் படிப்புக்கான மாணவா் சோ்க்கை சென்டாக் மூலம் நடைபெறுகிறது.இந்த நிலையில், அரசு நிா்வாக தாமதத்தால் 3 சுற்று மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டு, பின்னா் இட ஒதுக்கீடின்றி மாப்ஆப் முறையில் நேரடி பொதுப் பட்டியலில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.
மாப்ஆப் முறை காரணமாக இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை. இதனால், ஏழை மாணவா்கள் பாதிக்கப்படுகின்றனா்.எனவே, முதல்வா் இதில் தலையிட்டு அகில இந்திய தொழில்நுட்பக் குழு, பல் மருத்துவக் கல்வி அமைப்பின் அனுமதி பெற்று இடஒதுக்கீட்டு முறையில் மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments