தனியார் பேருந்துகளில் கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து அதிரடியாக ஆய்வு செய்த போக்குவரத்து போலீசார் நடத்துனர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தனர்.
ஆனால், தனியார் பேருந்துகளில் அப்படி செய்யாமல் கடலுாரில் இருந்து புதுச்சேரிக்கு செல்லவதற்கான முழு கட்டத்தையும் கேட்டு நடத்துனர் அடாவடி செய்வதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, கவர்னர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் சென்றன. இந்நிலையில், இன்று காலை கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார், கிருமாம்பாக்கம் சந்திப்பு பகுதியில் தனியார் பஸ்களை நிறுத்தி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, பஸ்சில் பயணம் செய்த பொது மக்களிடம், டிக்கெட்டிற்கு உண்டான பணத்தை பணம் கொடுங்கள். நடத்துனர்கள் கூடுதல் கட்டணம் கேட்டால், போலீசாருக்கு தெரியப்படுத்துங்கள் சம்மந்தப்பட்ட பேருந்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். மேலும், பேருந்து நடத்துனர்களிடம், பொது மக்களிடம் கூடுதலாக டிக்கெட் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுத்தனர்.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments