Breaking News

இந்தியா கூட்டணியின் பந்த் வெற்றியடைய புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கிறார் என முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் விமர்சனம்.


காரைக்கால் மாவட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து நெடுங்காடு, திருநள்ளாறு, நிரவி திருப்பட்டினம், கோட்டுச்சேரி, அம்பகரத்தூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. 

காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ் திமுக விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்டுகள் மதிமுக தமுமுக உள்ளிட்ட கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் 300க்கும் மேற்பட்டோர் திரண்டு புதிய பேருந்து நிலைய சிக்னலில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது புதுச்சேரி அரசையும் மின்துறையையும் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர் புதுச்சேரி மின் துறையை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது, ப்ரீபெய்டு  மின் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும், மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை ஈடுபட்ட முன்னுருக்கும் மேற்பட்ட இந்திய கூட்டணி கட்சியினரை போலீசார் கைது செய்தனர். 

போராட்டம் காரணமாக காரைக்காலில் பெரும் பரபரப்பு நிலவியது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் " மக்களின் நிலையை கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசு உடனடியாக மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் இல்லையென்றால் பல்வேறு போராட்டங்களை சந்திக்க நேரிடும்  எனவும் எச்சரிக்கை விடுத்தார். புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர் முதலமைச்சர் ரங்கசாமி பாஜகவுடன் கூட்டணியில் இருந்தாலும் இந்தியா கூட்டணியின் பந்த் வெற்றி பெறுவதற்கு மறைமுகமாக ஆதரவு அளித்துள்ளதாக விமர்சித்தார்.

No comments

Copying is disabled on this page!