மரக்காணம் அருகே ஞானக்கல்மேடு அருள்மிகு ஸ்ரீ சுயம்பு பூதக்காளி அம்பாள் திருக்கோயிலில் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு மஹா யாக சாலை பூஜைகள் நடைபெற்றது.
மரக்காணம் அருகேயுள்ள ஞானக்கல்மேடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுயம்பு பூத காளி அம்பாள் திருக்கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு மஹா யாக சாலை பூஜைகள் உபயதாரர் விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இலட்சுமணன் மஹாலக்ஷ்மி குடும்பத்தினர் ஏற்பாட்டில் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், பழங்கள், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. முன்னதாக பிரம்மதேசம் வெங்கடேசன் குருகளால் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
No comments