திருமணம் செய்துகொள்வதாக கூறி 17 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய கடலூர் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.?
கடலூா் நல்லவாடு பகுதியைச் சோ்ந்தவா் திருமாறன் (30). புதுச்சேரி தவளக்குப்பத்தை சோ்ந்த 17 வயது பள்ளி மாணவியுடன் நெருங்கி பழகிய திருமாறன், அவரைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கி உள்ளார்.அதன்பிறகு, அவரை திருமணம் செய்ய திருமுருகன் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீஸாா் கடந்த 2022-ஆம் ஆண்டு வழக்குப் பதிந்து,திருமாறனை கைது செய்தனா். புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் தீா்ப்பளிக்கப்பட்டது.
அதன்படி, குற்றம்சாட்டப்பட்ட திருமுருகனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுமதி உத்தரவிட்டாா். மேலும், மாணவியின் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.4 லட்சம் வழங்கவும் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அரசுத் தரப்பில் வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜரானாா்.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments