காரைக்கால் தர்மபுரம் வாய்க்கால் புதிய பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை.
காரைக்கால் மாவட்டம், தருமபுரம் பர்மா காலணி நகரில் அமைந்துள்ள தருமபுரம் வாய்காலில் புதிய கால்வாய் பாலம் ரூ.5,00,000/- திட்ட மதிப்பீட்டில் கட்டுவதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் A.M.H நாஜீம், காரைக்கால் பொதுப்பணித்துறை, நீர்பாசனம் மற்றும் பொதுசுகாதாரக் கோட்ட நிர்வாகப் பொறியாளர் J. மகேஷ் மற்றும் ஊர் மக்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவிப்பொறியாளர் S.கோவிந்தராஜ் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்.
No comments