கள்ளக்குறிச்சி அருகே மாவட்ட ஆட்சியர் புதிய அலுவலக கட்டிட கட்டும் பணி துவக்க விழா.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள வீரசோழபுரம் ஊராட்சியில், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் இதர அலுவலகங்கள் கட்டிடம் கட்டும் பணியின் துவக்க விழா இன்று காலை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டிடம் கட்டும் கட்டுமான பணிகளை துவக்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டார்கள்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர், ஒன்றிய கழக செயலாளர்கள், ஒன்றிய, பேரூர் பெருந்தலைவர்கள், துணைத் தலைவர்கள், கழக நிர்வாகிகள்,அரசு துறை சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் என ஏராளமானோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
No comments